பழநி தண்டாயுதபாணி நவபாஷண சிலையின் சிறப்பம்சம்கள்..!!

உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு ஆவினன் குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.
போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த  நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.
 
லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என  ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை  வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு  செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.
 
நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சமாகும். அந்த வியர்வை பெருக்கெடுத்து ஆறாக ஓடும்! அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் இரவுகால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம்  பூசப்படும். மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப்படும்.
 
மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். கீழே வைக்கப்பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப்படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதனால்,  இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்துவிடுவார்கள். 
 
இந்தப் பழனி மலைக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வடமேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்