லிங்க பைரவி தேவி மகா ஆரத்தி

திங்கள், 18 ஏப்ரல் 2011 (16:12 IST)
லிங்க பைரவி தேவி பெண் சக்தியின் ஓர் அற்புதமான ஆன்மீக வெளிப்பாடு. லிங்க வடிவம் கொண்ட எட்டடி உயரமுள்ள இந்த தேவி, பாதரசத்தை அடிப்படையாகக் கொண்ட சக்தி வாய்ந்த வடிவமாய் சத்குரு அவர்களால், பிராணப் பிரதிஷ்டை முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.

ஒரு பக்தர் பொருள் தன்மையிலான பலன்களை அடைய விரும்பினாலோ அல்லது அதைக் கடக்க விரும்பினாலோ, பக்தரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் தேவி அதற்குத் துணையிருப்பாள்.

ஆன்மீக நலத்தை நாடுபவர்களுக்கு, அப்பாதையில் உள்ள இடர்களை அகற்றி, உச்சகட்ட விடுதலையைப் பெற தேவி பரிவோடு வழி செய்வாள்.

மகா ஆரத்தி

ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் பைரவிக்கு நடனங்களுடன் கூடிய சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்று மாலை லிங்க பைரவியின் உற்சவ ஊர்வலமும் மகா ஆரத்தியும் நடக்கும்.

17ஆம் தேதி சித்திரைப் பெளர்ணமி அன்று மாலையு‌ம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

லிங்க பைரவி கோயில் தினசரி காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

முகவரி:
லிங்க பைரவி கோயில்
ஸ்ரீயோகினி டிரஸ்ட்
தியான லிங்க யோகத் திருக்கோயில் அருகில்
ஈஷா யோகா மையம்
செம்மேடு அஞ்சல்
வெள்ளியங்கிரி மலைச்சாரல்
கோவை - 641 114

வெப்துனியாவைப் படிக்கவும்