கலைச்சிறப்பு மிக்க தாராசுரம் திருக்கோயில்

செவ்வாய், 14 செப்டம்பர் 2010 (16:40 IST)
FILE
பழங்கால கலைத்திறனை வெளிப்படுத்தும் சிற்பங்களும், நாட்டியக் கலையை வளர்க்கும் நுட்பமான சிற்பங்களும் கொண்டதகுட‌ந்ததாராசுரம் திருக்கோயில்.

வரலாற்றுப் புகழ்பெற்ற இத்தலம் குடந்தையிலிருந்து அரசலாற்றைக் கடந்து தஞ்சைச் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இக்கோயிலிற்கு இரு வகையான வரலாறு உண்டு.

ஒரு சமயம் இந்திரன் வாகனமான ஐராவதம் என்ற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை நிறம் மாறி கருமை நிறம் அடைந்தது. இச்சாபம் அகல இத்தலம் வந்து சாபம் நீங்கிய ஐராவதம் வழிபட்ட காரணத்தால் இந்தத்தலம் ஐராவத நகரம் என்றும், இறைவன் ஐராவதேச்சுவரர் எனப் பெரும் அடைந்தார்.

அதன்பிறகு தாரன் என்ற அசுரன் தேவர்களை வெற்றி கொள்ளவும், மரணமற்ற பெருவாழ்வு பெறவும் இத்தலத்து இறைவனைப் பூஜித்து அருள் பெற்றமையால் தாராசுரம் என்று பெயர் பெற்றது. அவ்வசுரனின் மகன் மேகதாரன் வைகாசி மாதத்தில் இத்தல இறைவனுக்கு விழா எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

வரலாற்றுப்படி பார்த்தால் இராஜராஜன் கட்டிய காரணத்தால் இக்கோயில் இராஜராஜேஸ்வரம் என்று பேர் அடைந்ததாகவும், அதுவே மருவித் தாராசுரம் என வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு!

FILE
சிற்பக் கலை நுணுக்கம் கொண்ட இக்கோயிலின் முன் உள்ள பலி பீடத்தைத் தட்டினால் பலவகை ஓசைகள் கேட்கும். திருச்சுற்றுகளில் பழங்கால கலைத்திறனை வெளிப்படுத்தும் சிற்பங்களும், நாட்டியக் கலையை வளர்க்கும் நுட்பமான சிற்பங்களும் திகழ்கின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாறுகளின் சிறந்த பகுதிகள் கருங்கற்களில் சிறந்த கலை நுட்பத்துடன் செதுப்பட்டுள்ன.

அம்மன் தேவநாயகி, இறைவன் ஐராவதேசுவரர் கோயிலும் ஒரு காலத்தில் இணைந்திரு‌ந்‌திரு‌க்வேண‌்டு‌மஎன்று கருதப்படுகிறது. இங்கிருந்த கலைச் சிற்பங்கள் தஞ்சாவூர் சிற்பக் கலைக்கூடத்தில் வைத்துள்ளார்கள். கவனிப்பாரில்லாமல் சிதிலமடைந்து மதில்களுடன் இருந்த இக்கோயில் தற்பொழுது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்