1. Gone Girl
டேவிட் ஃபின்சர் இயக்கியிருக்கும் படம். அவர் இதுவரை இயக்கிய எந்தப் படமும் சோடை போனதில்லை. இதுவும் அப்படியே. ஐந்தாவது வருட திருமண நாளில் தனது மனைவி காணவில்லை என்று ஒருவன் புகார் செய்கிறான். அவள் எப்படி காணாமல் போனாள், யார் காரணம் என்று சுற்றிச்சுழலும் இந்த த்ரில்லர் டேவிட் ஃபின்சரின் கைவண்ணத்தில் மறக்க முடியாத காவியமாகியிருக்கிறது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 37.51 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.