யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - நோலனை பின்னுக்கு தள்ளிய அனிமேஷன் படம்

வியாழன், 13 நவம்பர் 2014 (09:22 IST)
5. Fury
பிராட் பிட் நடித்துள்ள இந்த இரண்டாம் உலகப் போர் படம் சென்ற வார இறுதியில் 5.63 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை அதன் யுஎஸ் வசூல் 69.40 மில்லியன் டாலர்கள்.
 

4. Ouija
இந்த ஹாரர் படம் சென்றவார இறுதியில் 5.87 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை அதன் யுஎஸ் வசூல் 43.33 மில்லியன் டாலர்கள். 
 

3. Gone Girl  
டேவிட் ஃபின்சரின் கான் கேர்ள் சென்ற வார இறுதியில் 6.21 மில்லியன் டாலர்களையும், இதுவரை யுஎஸ்ஸில் 145.54 மில்லியன் டாலர்களையும் தனதாக்கியுள்ளது. 
 

2. Interstellar
கிறிஸ்டோபர் நோலனின் இன்டெர்ஸ்டெல்லர் சென்ற வார இறுதியில் 47.51 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. வியாழக்கிழமை ப்ரிவியூவும் சேர்த்து 49.66 மில்லியன் டாலர்கள்.
 

1. Big Hero 6  
அனிமேஷன் படங்களுக்கு முன்னால் சூப்பர்ஹீரோக்களாலும் சிலநேரம் தாக்குப் பிடிக்க முடியாது. இந்த அனிமேஷன் படம் நோலனின் படத்துடன் சென்ற வாரம் வெளியானது. ப்ரிவியூ எதுவும் இல்லாமல் முதல் மூன்று தினங்களில் 56.22 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்