எதிர்பார்ப்பை கிளப்பும் ஏஞ்சலினா ஜோலியின் அன்புரோக்கன்

சனி, 6 டிசம்பர் 2014 (10:07 IST)
ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த ஏஞ்சலினா ஜோலி அந்த கிரீடத்தை கழற்றிவைத்து இயக்குனர் சிம்மாசனத்துக்கு மாறியிருக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியாகும் அன்புரோக்கன் டிசம்பர் 25 வெளியாகிறது.
நடிகை என்பதைத் தாண்டி போரால் பாதிக்கப்பட்ட நாடுகளின் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உதவிகள் செய்து வருகிறார் ஜோலி. இந்த புனரமைப்பு பணிகளுக்கு அவர் தூதுவராகவும் இருக்கிறார். ஜோலியின் ஆறு குழந்தைகளில் மூன்று அவரது கணவர் பிராட் பிட்டுக்கு பிறந்தவை. மற்ற மூன்று குழந்தைகள் ஜோலி - பிராட் பிட்டால் பின்தங்கிய தேசங்களிலிருந்து தத்து எடுக்கப்பட்டவை.
 
ஜோலி போஸ்னிய போரை பின்னணியாக வைத்து தனது முதல் படம், இன் த லேண்ட் ஆஃப் பிளட் அண்ட் ஹனி - ஐ இயக்கினார். அன்புரோக்கன் இரண்டாவது உலகப்போர் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரன் ஒருவனை ஜப்பான் படை பிடித்து வைத்ததை பின்னணியாகக் கொண்டது. படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பவர்கள் ஹாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களும், திரைக்கதையாசிரியர்களும், சிறந்த இயக்கத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்களுமான கோய்ன் சகோதரர்கள். 
 
படத்துக்கு எதிர்பார்ப்பு இருப்பதில் ஆச்சரியம் என்ன.

வெப்துனியாவைப் படிக்கவும்