இரண்டாயிரம் கோடியை எட்டிய த ரெவனென்ட்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (08:55 IST)
அலெஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்தின் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த தரெவனென்ட் உலகம் முழுவதும் இரண்டாயிரம் கோடிகளை எட்டிப் பிடித்துள்ளது.


 

 
கடும் பனியில் இயற்கை ஒளியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
 
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் என மூன்று முக்கிய கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றது. 
 
இப்படம் யுஎஸ்ஸில் சுமார் 150 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மொத்தமாக 176 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 
135 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் இவ்வளவு வசூலித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு லாபம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்