சைனாவை கலக்கும் ஏப்ஸ்

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (11:40 IST)
டான் ஆஃப் த பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் திரைப்படம் சைனாவில் கலெக்ஷனை அள்ளுகிறது. வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
ஹாலிவுட் படங்களின் பிரதான சந்தையாக சைனா உள்ளது. ஆனால் பிற நாடுகளில் வெளியான பிறகு தாமதமாகவே சைனாவில் ஹாலிவுட் படங்கள் வெளியாகும். சைனா அரசாங்கத்தின் ஏற்பாடு இது.

டான் ஆஃப் த பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் இதுவரை சைனாவில் 47 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் உலகளாவிய வசூல் - யுஎஸ்ஸும் சேர்த்து - 613 மில்லியன் டாலர்கள். இது இதன் முதல் பாகமான ரைஸ் ஆஃப் த பிளானெட் ஆஃப் த ஏப்ஸைவிட சுமாராக 130 மில்லியன் டாலர்கள் அதிகம்.
 

படத்தின் அபிரிதமான வசூல் காரணமாக விரைவில் அடுத்தப் பாகத்துக்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்