பியர்ஸ் பிராஸ்னனின் த நவம்பர் மேன்

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (11:26 IST)
சென்ற வாரம் பியர்ஸ் பிராஸ்னனின், த நவம்பர் மேன் வெளியானது. செமையான ஸ்பை த்ரில்லர். ஆனால்...
 

படம் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. ப்ரீமியர் காட்சிகளையும் சேர்த்து முதல் மூன்று தினங்களில் 9.4 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளது. திரைப்பட விமர்சகர்களுக்கு இந்த வசூல் ஆச்சரியம்தான்.

ஷான் கானிரிக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் ஜெnலித்தவர் பியர்ஸ் பிராஸனன். இன்னும் சொல்லப் போனால் ஷான் கானரியைவிட பிராஸனன்தான் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் ஆப்டாக பொருந்தினார். (அவரை டேனியல் க்ரேக் ஓவர்டேக் செய்து வருவது வேறு விஷயம்).

த நவம்பர் மேன் படத்தில் எக்ஸ் சிஐஏ அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட ஆபரேஷனுக்காக அவரை மீண்டும் பணியில் அமர்த்துகிறார்கள். அந்த வேலை எதிர்பாராத விதத்தில் மோசமடைகிறது. பிராஸ்னன் தனித்துவிடப்படுகிறார். படத்தில் பிராஸ்னனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது. ஆனால் வசூல்தான் கொஞ்சம் கம்மி.
 

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் த பேங்க் ஜாப், த ரிக்ரியூட் போன்ற பிரமாதமான கமர்ஷியல் படங்களை இயக்கிய ரோஜர் டொனால்ட்சன். பிராஸ்னன் நடிப்பில் வெளிவந்த டேன்டீஸ் பீக் படமும் இவர் இயக்கியதே.

வெப்துனியாவைப் படிக்கவும்