மைக்கேல் பே யின் புதிய படம் 13 ஹவர்ஸ்

வியாழன், 5 மார்ச் 2015 (15:25 IST)
பிரபல இயக்குனர் மைக்கேல் பே அடுத்து பொலிடிகல் த்ரில்லரை இயக்குகிறார். டேவிட் டென்மேன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா பிற நாடுகளின் மீது தொடுத்த தாக்குதல்கள், அமெரிக்கா மீது பிறர் தொடுத்த தாக்குதல்கள். இந்த இரண்டையும் சலிக்க சலிக்க தயாரிக்கிறது ஹாலிவுட். அப்படியொரு சக்கைதான் மைக்கேல் பேயின் படமும்.
 
2012 -இல் லிபியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, யுஎஸ் அம்பாசிடர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற குழுவைப் பற்றிய படம்தான், 13 ஹவர்ஸ். இதில் டேவிட் டென்மேன் ஸ்னைப்பராக நடிக்கிறார்.
 
பாராமவுண்ட் படத்தை தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்