லூசி இரண்டாம் பாகம் - சத்தமின்றி வேலையை தொடங்கிய லுக் பெஸான்

சனி, 27 ஜூன் 2015 (10:35 IST)
படம் எடுக்கும் வேகத்தில் லுக் பெஸான் இன்னொரு ராம் கோபால் வர்மா. ஒரே வித்தியாசம், வர்மாவின் படங்கள் இப்போதெல்லாம் இரண்டு நாள்களை தாண்டுவதில்லை. நிச்சய தோல்வி.


 

 
ஆனால், பிரெஞ்ச் இயக்குனர் லுக் பெஸான் ஹாலிவுட்டில் எடுக்கும் அனைத்துப் படங்களும் ஹிட்.
 
அடிப்படையில் இவர் திரைக்கதையாசிரியர். இவர் எழுதியவைதான் டேக்கன் மற்றும் அதன் இரு பாகங்களும். ட்ரான்ஸ்போர்ட்டர் சீரிஸும் இவரது திரைக்கதையில் உருவானவைதான். அடிக்கடி ஆங்கிலம், ப்ரெஞ்சில் படங்களும் இயக்குவார்.
 
2014 -இல் இவர் எழுதி இயக்கிய லூசி வெளியானது. 40 மில்லியன் டாலர்களில் தயாரான இப்படம் யுஎஸ்ஸில் மட்டும் 123 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. படம் வெளியான நேரம், லூசியின் இரண்டாவது பாகமா? சான்ஸே இல்லை. அதுபற்றி யோசிக்கவே இல்லை என்று சொன்ன லுக் பெஸான் இப்போது லுnசியின் இரண்டாவது பாகத்தின் வேலையில் பிஸி.
 
லுக் பெஸான் அன்று சொன்னது உண்மையாகதான் இருக்கும். ஒரு படத்தை எடுப்பதா வேண்டாமா என்று அவர் நாள் கணக்கில் யோசிப்பதெல்லாம் இல்லை. ஒரு சின்ன பொறி. அது கிடைத்தால் மளமளவென வேலைகள் ஆரம்பித்துவிடும்.
 
முதல் பாகத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்சனே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்