வர்றார் ஜேம்ஸ் பாண்ட்

புதன், 4 நவம்பர் 2015 (13:34 IST)
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாம் மென்டஸ் இயக்கிய முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படமான, ஸ்கைஃபால் திரைப்படமே இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்தது. அந்த சாதனையை புதிய படம், ஸ்பெக்டர் முறியடிக்குமா?



 

ஸ்கைஃபாலை இயக்கிய சாம் மென்டஸே ஸ்பெக்டரையும் இயக்கியுள்ளார். டேனியல் க்ரேக்தான் பாண்ட். இதுவரை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் உளவுத்துறை தலைவர் 'எம்' மாக நடித்த ஜுடித் டென்ஞ் ஸ்கைஃபாலில் சாகடிக்கப்பட்டதால் இந்தப் படத்தில் அவர் இருக்கப் போவதில்லை. அதேபோல் பல மாற்றங்களை சாம் மென்டஸ் சென்ற படத்தில் செய்திருந்தார். அது எவ்வளவு தூரம் வொர்க் அவுட்டாகும் என்பது ஸ்பெக்டரில் தெரியும்.

யுகேயில் படம் சென்ற மாதமே வெளியானது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை யுஎஸ் முதலான பல நாடுகளில் வெளியாகிறது. இந்தியர்கள் இந்தப் படத்தைப் பார்க்க 20 -ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும்.

படத்தைப் பார்த்தவர்கள், ஸ்கைஃபால் அளவுக்கு இல்லை, ஆனாலும் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளனர். ஸ்கைஃபாலே பத்தலை என்பவர்களுக்கு இது துயரச் செய்திதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்