யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (15:41 IST)
5. Gone Girl  
டேவிட் ஃபின்சரின் கான் கேர்ள் சென்ற வார இறுதியில் 4.56 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 152.6 மில்லியன் டாலர்கள்.
 

4. Beyond the Lights
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 6.20 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 

3. Interstellar
சென்ற வாரம் இரண்டாமிடத்தில் இருந்த படம் ஓரிடம் கீழிறங்கியிருக்கிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 28.31 மில்லியன் டாலர்கள். இதுவரை 96.93 மில்லியன் டாலர்கள்.
 
 

2. Big Hero 6
இந்த அனிமேஷன் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. சென்ற வார இறுதியில் 34.66 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 110.31 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 

1. Dumb and Dumber To
இருபது வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் இரண்டாவது பாகம். அதே ஜிம் கேரி, ஜெஃப் டேனியல்ஸ். சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 36.11 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்