பாரீஸில் ஆக்ஷன் படக்காட்சிகள் எடுக்க பிரெஞ்ச் போலீஸ் அனுமதி மறுப்பு

ஞாயிறு, 8 பிப்ரவரி 2015 (11:42 IST)
பிரான்சின் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஆக்ஷன் காட்சிகளை படமாக்க பாரீஸில் அனுமதி தரப்போவதில்லை என பிரெஞ்ச் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 
பாரீஸில் பிரெஞ்ச் மற்றும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பு அதிக அளவில் நடக்கின்றன. அதிகமும் ஆக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகள். தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளை எடுக்கையில் மக்கள் மத்தியில் சின்ன பீதி தோன்றியுள்ளது. சினிமா படப்பிடிப்பா இல்லை தீவிரவாத தாக்குதலா என்ற குழப்பம் அவர்களுக்கு உள்ளது.
 
சினிமா படப்பிடிப்பு போர்வையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வழி உள்ளது. இந்த காரணங்களால், ஆக்ஷன்படக் காட்சிகளை பாரீஸீல் படமாக்க போலீசார் தடை விதித்துள்ளனர். பிரான்ஸ் போன்ற சுதந்திரத்தை பேணும் நாட்டில் இதுபோன்ற தடையை அதிக நாள்களுக்கு நீட்டிக்க இயலாது. சிறிது காலத்திற்காவது இந்தத் தடையை நிலுவையில் இருக்கச் செய்வதே எங்களின் நோக்கம் என்று பாரீஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்