பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 -வது பாகத்தின் பெயர் அறிவிப்பு

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (10:49 IST)
வின் டீசல், பால் வால்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 -வது பாகத்தின் பெயரை யூனிவர்சல் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. 
பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸில் இதுவரை ஆறு படங்கள் வந்துள்ளன. வின் டீசலும், பால் வால்கரும்தான் முக்கிய நடிகர்கள். ஏழாவது பாகம் தயாராகிக் கொண்டிருந்த போதுதான் பால் வால்கர் கார் விபத்தில் மரணமடைந்தார். பொதுவாக இப்படியொரு சம்பவம் நடந்தால் படத்தில் அந்த நடிகர் இறந்துவிடுவதாக காட்டுவதுதான் வழக்கம். 
 
மாறாக பால் வால்கரின் கதாபாத்திரத்தை இறந்துவிடுவதாக காட்டாமல் வேறுவிதமாக காட்டியிருக்கிறாராம் இயக்குனர் ஜேம்ஸ் வான். தற்போது இந்த ஏழாவது பாகத்தின் பெயரை யூனிவர்சல் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. படத்தின் பெயர், ஃபியூரியஸ் 7.
 
2015 ஏப்ரலில் வெளியாகப் போகும் படத்தின் முதல் ட்ரெய்லரை நவம்பர் ஒன்று வெளியிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்