உலகம் முழுவதும் 2400 கோடிகளை வசூலித்த பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே

செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (15:27 IST)
ஹாலிவுட்டே கொஞ்சம் ஜெர்க்காகிதான் இருக்கிறது. யூனிவர்சல் வெளியிட்ட பிஃபிடி ஷேட்ஸ் ஆஃப் க்ரே உலக அளவில் 400 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. வெறும் 40 மில்லியன் டாலர்களில் உருவான படம் இது.
 
நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு இருந்தது. பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான படம், முதல்வார இறுதியில் யுஎஸ்ஸில் மட்டும் 94 மில்லியன் டாலர்களை கடந்து வசூலித்தது. சிலரால் கற்பனை மட்டுமே செய்யக் கூடிய வசூல். 
 
ஆனால் அடுத்தவார இறுதியில் 73 சதவீதம் வசூலில் வீழ்ச்சி கண்டது. படம் அந்தளவு போர். ஐஎம்டிபியில் பத்துக்கு ஐந்து மதிப்பெண்கூட இந்தப் படத்தால் பெற முடியவில்லை. யுஎஸ்ஸில் மட்டுமின்றி 50 வெளிநாடுகளிலும் இந்தப் படமே முதலிடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் வசூலான 280.5 மில்லியன் டாலர்களையும் சேர்த்தால் இதன் ஒட்டு மொத்த வசூல் 400 மில்லியன் டாலர்களைத் தொடுகிறது.
 
ஒரு சுமார் படம் இப்படியொரு சூப்பர் வசூலை பெறுவது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்