படமாகும் பிஃபா லஞ்சமுறைகேடுகள் - புதிய பேட்மேன் பென் அஃப்லெக் நடிக்கிறார்

ஞாயிறு, 28 ஜூன் 2015 (11:19 IST)
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) கால்பந்து போட்டிகள் நடத்தியதில் முறைகேடு செய்ததாக இந்த வருடம் பலமாக உதைபட்டது.


 

 
பிஃபாவில் நிகழ்ந்துள்ள பல்வேறு முறைகேடுகள் கால்பந்து உலகை உலுக்கியது. பிஃபாவில் ரூ.984 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் 14 பிஃபா நிர்வாகிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
 
பிஃபா நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக பிஃபா தலைவர் செப் பிளேட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
பெரும் ஊழல், பெரும் அழிவு எல்லாம் ஹாலிவுட் படங்களின் கச்சாப் பொருள்கள். தவறவிட மாட்டார்கள். இந்த மாபெரும் ஊழலும் ஹாலிவுட்டில் படமாகிறது.
 
வாரியர் திரைப்படத்தை இயக்கிய காவின் ஒ கார்னர் இந்தப் படத்தை இயக்க, ஆஸ்கர் விருது பெற்ற ஆர்கோ படத்தை இயக்கி நடித்தவரும், புதிய பேட்மேன் படத்தில் பேட்மேனாக நடித்து வருகிறவருமான பென் அஃப்லெக் இதில் பிரதான வேடமேற்கிறார்.
 
இந்தத் தகவலை பென் அஃப்லெக்கும் உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்