இந்த சீரிஸின் முதல் பாகத்திலிருந்தே இடம்பெறும் வின் டீசல் இடையில் சேர்ந்து கொண்ட ட்வைனி ஜான்சன், சென்ற பாகத்தில் இணைந்த ஜேசன் ஸ்டெதம் ஆகியோர் எட்டாவது பாகத்திலும் இருக்கிறார்கள். கூடுதலாக, மேட் மேக்ஸ் - ஃப்யூரிரோடு படத்தில் அசத்திய சார்லிஸ் த்ரோனும் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்திய தகவல், முக்கியமான வேடம் ஒன்றில் ஸ்காட் ஈஸ்ட்வுட்டும் நடிக்க உள்ளார். இவர் பிரபல நடிகர், இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் மகன்.