ரசிக்கப்படாத ட்ராகுலாக்கள்

செவ்வாய், 7 அக்டோபர் 2014 (14:37 IST)
ஹாரர் பட வரிசையில் ட்ராகுலா குறித்த படங்களுக்கு சிறப்பான இடமுண்டு. கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் ட்ராகுலா கதையை தயாரித்து தருவதில் ஹாலிவுட் தன்னிகரற்றது.
 
ப்ரம் ஸ்டாக்கரின் ட்ராகுலா நாவலைத் தழுவி ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா இயக்கிய ட்ராகுலா படம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் ஒரு மனிதன் தனது அளவற்ற காதலுக்காக ட்ராகுலாவாக மாறுவதாக சித்தரிக்கப்பட்டது. 
அதன் பிறகு விநாயகர் சதுர்த்திக்கு நமது கற்பனைக்கு ஏற்ப கார்கில் பிள்ளையார் கார்முகில் பிள்ளையார் காரோட்டும் பிள்ளையார் என்று உற்பத்தி செய்வது போல் ட்ராகுலாக்கள் விதவிதமாக டிஸைன் டிஸைனாக வெளிவர ஆரம்பித்தன. அதில் ஒன்றுதான் இந்த வாரம் வெளியாகவிருக்கும் ட்ராகுலா அன்டோல்ட் (Dracula Untold).
 
இதுவரை சொல்லப்படாத ட்ராகுலா என்று ஆசை காட்டினாலும் ப்ரீமியர் ஷேnவில் படத்தைப் பார்த்தவர்கள், சரிதான் போப்பா நீயும் உன் ட்ராகுலாவும் என்று புறந்தள்ளி விட்டனர். போஸ்டரில் உள்ள பெப் படத்தில் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்