2017 -இல் பிளேட் ரன்னர் படத்தின் சீக்வெல்

வியாழன், 28 ஜூலை 2016 (11:35 IST)
1982 -இல் ரிட்லி ஸ்காட்டின் இயக்கத்தில் வெளியான பிளேட் ரன்னர் சயிக்ஸ் பிக்ஷன் திரைப்படம் ரசிகர்களை அசத்தியது. அந்தப் படத்தை இன்றும் போரடிக்காமல் பார்க்கும் ரசிகர்கள் நிறைய.



பிளேட் ரன்னரின் சீக்வெல் தற்போது தயாராகிறது. படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கவில்லை. பிறகு?

சிக்காரியோ என்ற அட்டகாசமான படத்தை சென்ற வருடம் தந்த Denis Villeneuve பிளேட் ரன்னரின் சீக்வெலை இயக்குகிறார். பிலிப் கே.டிக் எழுதிய 'டூ ஆன்ட்ராயிட்ஸ் ட்ரீம் ஆஃப் எலெக்ட்ரிக் ஷீப்' நாவலை தழுவி இந்த சீக்வெல் தயாராகிறது.

பிளேட் ரன்னரின் சீக்வெல் எனும் போதே எதிர்பார்ப்பு கூடும். சீக்வெலை இயக்குவது சிக்காரியோ படத்தை இயக்கியவர் எனும் போது எதிர்பார்ப்பு இரு மடங்காகும்.

2017 -இல் இந்த சீக்வெல் திரைக்கு வருகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்