பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட், த டார்க் நைட் ரைசஸ் படங்களில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேல் இனி பேட்மேன் உடையை போடப்போவதில்லை என்று அறிவித்ததும் புதிய பேட்மேனாக நடிகர் பென் அஃப்லெக்கை அறிவித்தனர். உடனடியாக இணையத்தில் பென் அஃப்லெக்கையும், அவரை தேர்வு செய்த தயாரிப்பாளர்களையும் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். யாருக்கும் பென் அஃப்லெக்கின் மீது நம்பிக்கையில்லை.