மொக்கப் படத்துக்கு முதலிடமா? குமுறித் தீர்க்கும் ரசிகர்கள்

திங்கள், 16 பிப்ரவரி 2015 (12:14 IST)
சென்ற வாரம் - ஃபெப்ரவரி 13 - பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படம் வெளியானது. யுஎஸ் மற்றும் 55 வெளிநாடுகளில் படத்தை வெளியிட்டனர்.
 

 
முதல் மூன்று தினங்களில் இந்த 55 நாடுகளிலிருந்து மட்டும் 158 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. தயாரிப்பாளர்களே இவ்வளவு அதிக வசூலை எதிர்பார்க்கவில்லை. யுஎஸ் வசூலையும் சேர்த்தால் 239.7 மில்லியன் டாலர்கள். மூன்றே தினங்களில் 1500 கோடிக்கும் மேல். படத்தின் பட்ஜெட் வெறும் 40 மில்லியன் டாலர்கள் மட்டுமே. 
 
சரி, படம் எப்படி?
 
அதுதான் வேடிக்கை. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் முதல் மூன்று தினங்களில் பெருவாரியான ரசிகர்கள் படத்தைப் பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மட்டுமின்றி எதிர்பாராத அளவுக்கு படம் மோசமாக உள்ளதாம். இந்த மொக்கப் படத்துக்கா இத்தனை பெரிய ஓபனிங் என்று யுஎஸ் ரசிகர்கள் பல்லை கடிக்கின்றனர்.
 
படம் இந்தியாவுக்கு வந்தால் யுஎஸ் ரசிகர்களின் பற்கடிப்பை இங்குள்ள ரசிகர்கள் நினைவு வைத்திருப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்