கஹானியை சுஜாய் கோஷ் இயக்கியிருந்தார். வெளிநாட்டிலிருந்து தனது கணவனைத் தேடி கொல்கத்தா வரும் கர்ப்பிணியான வித்யாபாலனை சுற்றி நடக்கும் கதையிது. கணவனைத் தேடி வந்த வித்யாபாலன் கடைசியில் என்ன செய்கிறார், அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது திடுக்கிடும் சஸ்பென்ஸ்.
இதனை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் இயக்கி வெளியிட்டார் இயக்குனர் சேகர் கம்மூலா. நயன்தாரா நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை.
இந்நிலையில், த கேர்ள் வித் ட்ராகன் டாட்டூஸ் (பிரெஞ்ச் வெர்ஷன்), டெட் மேன் டவுன் படங்களை இயக்கிய Niels Arden Oplev கஹானியை ஹாலிவுட்டில் ரீமேக் செய்கிறார். ஹாலிவுட்டுக்காக அமெரிக்க பெண் தனது கணவனைத் தேடி இந்தியா வருவதாக கதையை சிறிது மாற்றி உள்ளனர்.