விபத்துக்கு வேகமே காரணம்

புதன், 4 டிசம்பர் 2013 (20:12 IST)
கார் விபத்தில் நடிகர் பால் வால்கர் மரணமடைந்ததற்கு அதிகபட்ச வேகமே காரணம் என லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெ‌ரிஃப் அலுவலகம் தெ‌ரிவித்துள்ளது.

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பால் வால்கர். சட்டவிரோதமாக நடத்தப்படும் தெரு கார் பந்தயத்தைப் பற்றிய பாஸ்ட் அண்ட் தி பியூ‌ரியஸ் படமே வால்கரை பிரபலப்படுத்தியது. 2001ல் இப்படம் வெளியானது. இந்த சீ‌ரிஸின் ஆறு படங்களில் ஐந்தில் வால்கர் நடித்தார். ேம்ஸ் வானின் இயக்கத்தில் ஏழாவது படம் தயாராகி வருகிறது. அதிலும் வால்கர் இடம்பெற்றிருந்தார்.

2005ல் வெளியான வால்க‌ரின் இன் டு தி ஸீ அவpன் பாடி லாங்வேஜை முழுமையாக வெளிப்படுத்திய படம் என்று சொல்லலாம். அவரும் ஜெஸிகா ஆல்பாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் நன்றாக இருந்தும் வெளியான போது ச‌‌ரியான வரவேற்பை பெறவில்லை. என்றாலும் அவருக்கு இந்தப் படமே அதிக பெண் ரசிகைகளைப் பெற்றுத் தந்தது.

பாஸ்ட் அண்ட் தி பியூ‌ரியஸ் சீ‌ரிஸ்தான் வால்கpன் அடையாளம். அந்தப் படத்தின் மையமான வேகம்தான் அவரைப் பிரபலப்படுத்தியது. அதே வேகம் நிஜ வாழ்வில் அவ‌ரின் உயிரை பறித்ததை ஐரணி என்றுதான் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்