யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ்

செவ்வாய், 15 டிசம்பர் 2009 (18:57 IST)
யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2012 குறைவான கலெ‌க்சனையே பெற்றிருக்கிறது. முதல் ஐந்து இடங்களிலிருந்து அப்படம் இல்லை.

5. Old Dogs
ஓல்டு டாக்ஸ் சென்ற வார இறுதியில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வார இறுதியில் 6.89 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 33.9 மில்லியன் டாலர்கள்

4. Christmas Garol
நான்காவது இடத்தில் கிறிஸ்துமஸ் கரோ‌ல். சென் வார இறுதியில் 7.76 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம், இதுவரை 115 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.

3. Brothers
சென்ற வாரம் வெளியான பிரதர்ஸ் மூன்றாவது இடத்தை‌ப் பிடித்துள்ளது. வெளியான முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 9.53 மில்லியன் டாலர்கள்.

2. The Twilight Saga : New Moon
ஆதிக எதிர்பார்ப்புடன் வெளியான படம். எதிர்பார்ப்புக்கு ஏற்ப இதுவரை 255 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல், 15.4 மில்லியன் டாலர்கள்.

1. The Blind Side
ரசிகர்கள், விமர்சகர்கள் என இரு தரப்பின‌ரின் பாராட்டுகளும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை 129 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 20 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்