நான்தான் ஹாலிவுட்டின் பேரழகி

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (16:23 IST)
ஜுலியா ராபாட்ஸுக்கு 46 வயதாகிறது. இன்னும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜுலியா ராபர்ட்ஸை தாண்டி வேறு யாருமே அழகில்லை என்று சொல்லும் வெறியர்களும் இதில் அடக்கம்.
இளம் வயதில் ஹாலிவுட்டின் பேரழகி நான்தான் என்று நினைத்ததுண்டு என ஜுலியா ராபர்ட்ஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். ஆனால், உலகின் முதல் ஐந்து ஹாட்டஸ்ட் ஆக்ட்ரஸ் இன் பிகினி போன்ற எந்த லிஸ்டிலும் இதுவரை அவர் இடம்பெற்றதில்லை. அதனால்தான் புகழ் தலைக்கு ஏறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஜுலியா ராபர்ட்ஸை தேடி இப்போதும் வாய்ப்புகள் வருகின்றன. வெறும் அழகான நடிகையாக இருந்திருந்தால் இவ்வளவு காலம் ஹாலிவுட்டில் நிலைத்திருக்க முடியாது என்பதையும் அவர் ஒத்துக் கொண்டுள்ளார். 
 
46 வயதானாலும் அவர் இன்னும் அழகிதான். அந்த எழுபது எம்எம் வாயை திறந்து சிரித்தால் பழைய பேரழகியில் கொஞ்சத்தை இப்போதும் பார்க்கலாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்