Jor-El கதாபாத்திரம் மேன் ஆஃப் ஸ்டீலில் சாகடிக்கப்பட்டு விட்டது. சாகடிக்கப்பட்டதற்கு முன்புள்ள கதையை எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் தன்னை இனி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்க மாட்டார்கள், அவர்களுக்கு அப்படியொரு ஐடியாவே இல்லை என க்ரோவ் கூறினார். அதன் காரணமாகவே இனிமேல் சூப்பர்மேன் படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்தார்.