இந்த கோடையில் திரைக்கு வருவதாக இருந்த படம் சென்ற வருடம் நவம்பரில் பால் வால்கர் (Paul Walker ) மரணமடைந்ததைத் தொடர்ந்து 2015 ஏப்ரல் 10 -ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. பால் வால்கரின் மரணமும், படம் ஒரு வருடம் தள்ளிப் போனதும் ஈடுசெய்யமுடியாத இழப்பு.
இந்தப் படத்தில் வழக்கம் போல வின் டீலும், பால் வால்கரும் இருக்கிறார்கள். பால் வால்கர் இறந்தாலும் படத்தில் அவரை சாகடிக்கவில்லை என படத்தை இயக்கியிருக்கும் ஜேம்ஸ் வான் (James Wan) கூறியுள்ளார். சென்ற வருடம் பட்டையை கிளப்பிய ஹாரர் படம் த கான்ஜுரிங்கை இயக்கியவர் ஜேம்ஸ் வான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏழாவது பாகத்தில் பால் வால்கர், விக் டீசல், ட்வைனி ஜான்சன் ஆகியோருடன் ஹர்ட் ரஸல், ஜேஸன் ஸ்டெதம் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.