என்னது... அயன் மேன் அவ்வளவுதானா?

வியாழன், 11 செப்டம்பர் 2014 (13:33 IST)
ஹாலிவுட்டில் டாலர் வசூல் சூப்பர் ஹீரோக்களில் அயன் மேனுக்கு முக்கியமான இடம் உண்டு. அயன் மேனாக நடிக்கும் ராபர்ட் டௌவ்னி ஜுனியரின் டேக் இட் ஈஸி நடிப்புக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அயன் மேன் இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. மூன்றாவது பாகம் அயன் மேன் ரசிகர்களையே பெரிதும் சோதித்தது. அப்படியிருந்தும் படம் டாலர்களை அள்ளியது. இந்நிலையில் அயன் மேன் நான்காவது பாகம் எப்போது என்ற கேள்விக்கு, கண்டிப்பாக அயன் மேன் நான்காவது பாகம் வராது என பதிலளித்துள்ளார் ராபர்ட்.

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இந்தப் பதிலை அவர் தெரிவித்தார்.

அவெஞ்சர்ஸ் படத்தின் இரு பாகங்களில் அயன் மேனாக நடிக்க ராபர்ட் ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த இரு படங்களுக்குப் பிறகு அயன் மேன் உடைக்கு நிரந்தரமாக குட்பை சொல்ல அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்