இந்த புதிய படம் எக்ஸ் மென் பர்ஸ்ட் கிளாஸின் சீக்வெலாக இருக்கும். படத்தில் வரும் மியூட்டன்ட்களுக்கு மேக்னெட்டோ, புரபசர் எக்ஸ் என்று இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு படுபயங்கர தலைவரை காட்டயிருக்கிறார்கள். அவர்தான் இந்தப் புதிய படத்தின் வில்லன். இதுவரை எக்ஸ் மென் சீரிஸில் காட்டப்பட்ட வில்லன்கள் அனைவரையும்விட இந்த புதிய வில்லன் படுபயங்கரமானவராம்.