இந்த போப்பை எனக்குப் பிடிச்சிருக்கு - ரஸல் க்ரோ

திங்கள், 31 மார்ச் 2014 (00:07 IST)
கடந்த வெள்ளிக்கிழமை - அதாவது நாளை ரஸல் க்ரோ நடித்த நோவா வெளியாகிறது. கடந்த மார்ச் 10 தேதி மெக்சிகோவிலும், 13 ஆம் தேதி ஜெர்மனியிலும், 17 ஆம் தேதி ஸ்பெயினிலும் இதன் ப்ரீமியர் ஷோ நடந்தது.
20 ஆம் தேதி தென் கொரியாவில் படம் வெளியானது. எகிப்த், பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளில் படம் வெளியான நிலையில் யுஎஸ், இந்தியா உள்பட பல நாடுகளில் 28 ஆம் தேதி படம் வெளியாகிறது.
 
படம் அமெரிக்காவில் வெளியாகும் முன்பே சிலர் திட்டமிட்டு படத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். மதரீதியான தாக்குதல்களும் இதில் அடக்கம். இந்த விமர்சனங்களால் கடுப்பான க்ரோவ், இது முட்டாள்த்தனமான தாக்குதல் என்று பேட்டியில் சாடினார்.
 
பைபிள் பழைய ஏற்பாட்டில் வரும் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் கெட்டவர்களாக மாறியதால் நல்லவரான நோவாவையும் அவரது குடும்பத்தையும், விடுத்து மற்ற அனைவரையும் பெருமழை பெய்யச் செய்து நீரில் மூழ்கடிக்கிறார் யெகோவா எனும் கடவுள். நோவாவின் பிரமாண்ட கப்பலில் வனவிலங்குகளுக்கும் அடைக்கலம் தரப்படுகிறது. இந்த கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
பைபிள் கதைகளை படமாக்குகையில் வாடிகானின் ஆசீர்வாதம் முக்கியம். வாடிகான் தலையசைத்தால் உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் படம் பார்க்க தயாராகிவிடுவார்கள். அது 
 
ஒருவகையான சிக்னல். இந்த பக்தி வியாபாரத்துக்காக இப்போதைய போப் பிரான்சிஸை பார்க்க முயன்றார் ரஸல் க்ரோவ். ஆனால் இரண்டுமுறை அனுமதி மறுக்கப்பட்டு - ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவின் ஆதரவு வேண்டும் என்பதாலோ என்னவோ - சென்ற வாரம் க்ரோவ் போப்பை பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
அவரை சந்தித்த பின் பேட்டிளித்த க்ரோவ், நான் கத்தோலிக்கன் கிடையாது. இதற்கு முன்பிருந்த எந்த போப்புடனும் அறிமுகமும் கிடையாது. ஆனா இந்த ஆளை - பிரான்சிஸை - எனக்குப் பிடிச்சிருக்கு என்றார்.
 
நோவா கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையை சொல்லும் படம் என்பதையெல்லாம் தாண்டி மிக முக்கியமான படம். படத்தை இயக்கியிருக்கும் டேரன் அரோனோப்ஸ்கி தி ரெஸ்ட்லர், ப்ளாக் ஸ்வான் போன்ற அட்டகாசமான படங்களை இயக்கியவர். வழக்கமான ஹாலிவுட் இயக்குனர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
 
டேரனுக்காக நோவாவைப் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்