கதையில் வரும் ஆஷா Prague -ல் படித்து வரும் மாணவி. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மஹிரா ஹக்கர். இதற்கு முன் பல ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தா பூர்வீகம். பல சர்வதேச விருதுகள் வாங்கியிருக்கும் இப்படம் இன்று அமெரிக்காவில் வெளியாகிறது. அமெரிக்கா என்றால் ஒட்டு மொத்த வட அமெரிக்காவில் அல்ல. நியூயார்க் சிட்டியில் மட்டும். வரும் 18ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிஃபோர்னியா. அதையடுத்து இன்னொரு நாளில் இன்னொரு மாகாணம்.