அவதார் சாதனையை முறியடித்த கொரியன் படம்

புதன், 20 ஆகஸ்ட் 2014 (13:48 IST)
அவதார் சாதனையை முறியடித்தது என்றதும் என்னதோ ஏதோ என பதற வேண்டாம். கொரியன் படம் முறியடித்தது தென் கொரியாவில் அவதார் படத்தின் சாதனையை. 
தென் கொரியாவில் 13.6 மில்லியன் டிக்கெட்கள் விற்றது முதல்முறை அவதார் படத்துக்குதான். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது. அதனை கொரிய படமான ரோரிங் கரன்ட்ஸ் (Roaring Currents) படம் முறியடித்துள்ளது.
 
இந்தப் படத்தை இயக்கியவர் Kim Han-min. வார் ஆஃப் ஆரோஸ், ஹேண்ட்போன் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர். இவரது ஹேண்ட்போன் படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மலையாளத்தில் வெளியான சாப்பா குருசு. தமிழில் இப்படம் புலிவால் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
 
கடந்த ஞாயிறுவரை இந்த சரித்திரப் படத்தை 14.227 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். தென் கொரியாவின் சரித்திரத்தில் இப்படம் முதல்முதலில் 100 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது (107.6 மில்லியன் டாலர்கள்). இது சுமாராக 650 கோடி ரூபாய்.
 
16 -ம் நூற்றாண்டு கதையான இது விரைவில் வேறு நாடுகளிலும் வெளியாக உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்