அமெரிக்கர்களுக்கு ஆஸ்கர் படங்களில் ஆர்வமில்லை

புதன், 26 பிப்ரவரி 2014 (14:03 IST)
நாம்தான் ஆஸ்கர் ஃபீவர் என்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் குறித்து மாங்கு மாங்கென்று எழுதுகிறோம். அமெரிக்கர்களுக்கு அதில் ஆர்வமேயில்லை. சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். சிறந்த படம் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 படங்கள், மற்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட 2 படங்கள். இவற்றில் எத்தனைப் படங்களை அமெரிக்கர்கள் பார்த்திருக்கிறார்கள்?
FILE

மொத்தம் 1,433 பேர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சில ஹாக்கிங் முடிவுகள்.

64 சதவீதம் பேர் படுசுத்தம். மேலே குறிப்பிட்ட 11 படங்களில் ஒன்றைகூட பார்க்கவில்லை. மற்ற 36 சதவீதத்தில் கேப்டன் பிலிப்ஸை 15 சதவீதத்தினர் பார்த்துள்ளனர். கிராவிடியை 14 சதவீதத்தினர். அமெரிக்கன் ஹசில், தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் படங்களை 12 சதவீதத்தினர்.

சிறந்தப் படத்துக்கான விருது 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் பெறும் என்று 9 சதவீதத்தினரும், கிராவிடியும், கேப்டன் பிலிப்ஸும் கைப்பற்றும் என 8 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். 7 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்.
FILE

சிறந்த நடிகைக்கான போட்டியில் சான்ட்ரா புல்லக் முதலிடத்தில் உள்ளார். நடிகரில் லியோனார்டோ டிகாப்ரியோ. இயக்குனர்களில் 12 இயர்ஸ் ஏ ஸ்லேவை இயக்கிய ஸ்டீவ் மெக்குயின் முதலிடத்திலும் மார்டின் ஸ்கார்சஸே இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்கர் என்றால் அமெரிக்காவுக்கு வெளியே உள்ளவர்கள்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்களோ என்று எண்ண வைக்கிறது இந்த சர்வே.

வெப்துனியாவைப் படிக்கவும்