தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவது ஏன்...?

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:49 IST)
ஐந்து நாள், ஐந்து காரணங்களுகாக வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி, தென்மாநிலங்களில் நரகாசுரனை கொன்றதற்காக மட்டும் கொண்டாடப்படுகிறது.


தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் யம தீபம் ஏற்ற வேண்டும். மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்.
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்.
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தொடர்ந்து ஐந்து நாள் கொண்டாடப்படுகிறது.

நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் ‘தீபாவளி' என்று கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், ‘நரக சதுர்த்தசி' என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது.

கேதார கௌரி விரதத்தை பௌர்ணமிக்குப் பிறகு வரும் பிரதமை முதல் தொடங்கி அமாவாசை வரை 14 நாள்கள் செய்வது நல்லது. அதுவும் இயலாதவர்கள், தீபாவளி அன்று இந்த நோன்பினை மேற்கொள்ளலாம்.

நான்காம் நாள் ‘பல்ப்ரதிபாதா’, ‘பலிபத்யாமி’ என்று கொண்டாடப்படுகிறது. பலியை மூன்று அடியால் பாதாள லோகத்தில் அழுத்தி அழித்த விஷ்ணு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, அடுத்த பிரதமை அன்று வந்து அவனது அறிவு ஒளியால், உலகின் அஞ்ஞான இருட்டை அழிக்க அனுமதித்ததால், அன்று பல இடங்களில் பலிச் சக்கரவர்த்தி வழிபாடு செய்து, கோ பூஜை செய்வர்.

ஐந்தாவது நாள் ‘பைய்யா தோஜ்’ என்பது ஆகும்.  யம  துவிதியையாக கொண்டாடப்படுகிறது.அன்றுதான்  யமன் தன்னுடைய சகோதரியான யமுனையை காண பூலோகத்திற்கு வந்தார்.யமுனை அவனை வரவேற்று, பலவித இனிப்பு பலகாரங்கள், அன்னங்கள் படைத்து அவரை உண்ண செய்தாள். இதனால் யமன் மனம் மகிழ்ந்து, நீ எனக்கு உபசாரம் செய்த இந்நாளில் எந்த சகோதரி தன்னுடன் பிறந்தவனுக்கு விருந்து வைத்து அவன் மனம் குளிரும்விதம் செய்கிறாளோ அவளுக்கு சர்வ மங்களமும், தாலி பாக்கியமும் நீடித்து இருக்கும் என்ற வரத்தை அருளினார்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்