ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும். வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும். மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.
திருமணத்தடை நீங்கும்.பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப் பெருக்கு ஏற்படும். நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும். ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத் தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம்.அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.
நைவேத்தியங்கள்: தோல் எடுக்காத மிளகு சேர்த்த உளுந்து வடை, வெண்ணை எடுக்காத தயிர்சாதம், மொச்சை ,சுண்டல்,சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம்,பச்சைகற்பூரம் கலந்த பால்,கருப்பு எள் உருண்டை , சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.மாதுளம்பழம் மிகச் சிறப்பு.
பன்னிரு திருநாமங்கள்:
1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேச்வரி, 5. சமயசங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரிணி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகாசேனா, 11. ஆக்ஞா சக்ரேச்வரி, 12. அரிக்னீ.