பகவத்கீதை; இறைவன் உபதேசம் அறிவோம்

சனி, 31 ஜூலை 2021 (00:09 IST)
பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். "பகவத்"  என்றால் இறைவன். "கீதா" என்றால் நல்ல உபதேசம்.
 
இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். தாகீ என்றால் "தியாகம்". வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள்.
 
துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் "கீதா" விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத்  தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார்.
 
எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.
 
கிருஷ்ணர் அர்சுனனிடம் என்னையன்றி ஓரணுவும் அசையாது. 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான், இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான். உன் செயல்களையெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி,  அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன் என்று கண்ணன் கூறுவதாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்