இன்று ஐப்பசி பெளர்ணமி.. சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

திங்கள், 7 நவம்பர் 2022 (17:52 IST)
இன்று ஐப்பசி பெளர்ணமி.. சிவாலயங்களில் அன்னாபிஷேகம்
இன்று ஐப்பசி மாத பௌர்ணமி என்பதால் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. 
 
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கமான ஒன்றாகும். இந்த நாளில் அன்னாபிஷேகம் செய்தால் மிகவும் விசேஷமானது என்றும் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் 
 
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறும் என்பது ஐதீகம் என்பதால் இன்று தஞ்சை பெரிய கோவில் உள்பட பல சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே இன்றைய தினத்தில் சிவாலயம் சென்று அன்னாபிஷேக வழிபாடு செய்தால் கோடி சிவ தரிசனம் செய்ததற்கு பலன் என்றும் கூறிவருகின்றனர். பூமிக்கு மிக அருகில் இருந்து சந்திரன் முழு ஒளியையும் பூமியில் வீச செய்யும் தினம் ஐப்பசி பௌர்ணமி என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகி உள்ளது 
 
இந்த ஒளி ஆற்றல் பரிபூர்ணமாக பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்