ஆன்லைனில் அபிஷேகம் டிக்கெட்: திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (16:56 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
2020 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுக்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மேலும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும் கோவில்களுக்கு நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள் செலுத்தலாம் என்றும் இந்த கியூஆர்  கோடு விளம்பர பலகைகள் கோவிலின் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்