இறைவனை வழிபடுவதற்கும், அவரது அருளைப் பெறுவதற்கும். பாவங்களைப் போக்கிக்கொள்ளவும், மன அமைதியை பெறவும், நன்றி செலுத்துவதற்கும், வேண்டுதல்களை நிறைவேற்றவும் விரதம் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு அறிவியலும் உண்டு.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், ஜீரண அமைப்புக்கு ஓய்வு கொடுக்கவும், உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் விரதம் கடைபிடிக்கப்படுகிறது
விரதம் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் முழுவதும் இலகுவான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருக்கும்போது, கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
தியானம், பஜனை, யோகா போன்ற ஆன்மீக செயல்களில் விரதத்தின்போது ஈடுபடுவது நல்லது. விரதம் முடிந்ததும், திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். விரதம் இருப்பதில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்பட்டால், உடனடியாக விரதத்தை முறித்து மருத்துவரை அணுக வேண்டும்.