சென்னையில் சூரியனுக்கு என சிறப்பு கோவில் உள்ளது தெரியுமா?

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (18:38 IST)
கும்பகோணம் அருகே சூரியனார் கோவில் என்ற கோயில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சென்னை வண்டலூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கொளப்பாக்கம் என்ற பகுதியில் சூரியனுக்கு இன்று சிறப்பு கோயில் உள்ளது. 
 
சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் முதன்மையாக கருதப்படும் இந்த கோவில்  போரூரில் இருந்து  விருகம்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது.  
 
1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான கோவிலில் சிவபெருமானை பார்த்தபடி மேற்கு திசையில் சூரியன் உள்ளார். தனி சன்னதியில் உள்ள சூரியன் இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  
 
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் என்றும் ஆறு வாரம் தொடர்ந்து இங்கு உள்ள பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்