சகல பாவங்களை தீர்க்கக்கூடிய சுக்ரவார பிரதோஷ வழிபாடு !!

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (16:55 IST)
பிரதோஷம் வரும்  மாதம், கிழமை ஆகியனவற்றைக்கொண்டு அதை வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷ த்துக்கும் ஒரு தனிச் சிறப்பும் பலனும் கூறப்படுகிறது.  இன்று நிகழும் பிரதோஷம், 'சுக்ர வார பிரதோஷம்' என்று போற்றப்படுகிறது.


சுக்ரன் என்றால் வெள்ளி. வெள்ளிக்குரிய இந்த நாளில் வரும் பிரதோஷம் சுக்ரவார பிரதோஷம் எனப்படுகிறது. வெள்ளிக்கிழமைகள், அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள். பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி மற்றும் சிவனுக்கு நிகழும் அபிஷேகங்களை கண்டு வழிபடுவது சிறப்பாகும்.

இன்று ஈசனுக்கு, மகாலட்சுமியின் அம்சமான வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய, கடன் தொல்லைகள் நீங்கும். செல்வ வளம் சேரும் என்று நம்பப்படுகிறது. இன்று ஈசனுக்கு பால் சாதம், சர்க்கரைப் பொங்கல்  போன்ற நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்க, சகல பாவங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

நந்தியெம்பெருமானே...
கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்.

Edited by Sasikala
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்