ஒருசமயம் தஞ்சை மாநிலம் முழுவதும் மழையின்றி கடும் பஞ்சத்தில் வாடியது அப்போது, தஞ்சை மன்னர் சேவப்பநாயக்கர் ஸ்வாமிகளைப் பணிந்து, பஞ்சம் தீர ஏதேனும் உபாயம் அருளுமாறு வேண்டினார். அதன்படி ஸ்வாமிகள் வருண ஜபத்துடன் யாகம் ஒன்றை நிகழ்த்தினார். யாகம் செய்த உடனே மழை பொழிந்து மண் குளிர்ந்தது.
ஏரி குளங்கள் நிறைந்தன. இதனால் மகிழ்வெய்திய மன்னர், விலையுயர்ந்த ரத்தினங்கள் பதித்த அழகிய மணிமாலையை தனது அன்பின் அடையாளமாக வழங்கினார். அப்போது தாம் செய்து கொண்டிருந்த யாகத்தில் அந்த மணிமாலையை ஸ்வாமிகள் அர்ப்பணித்தார். அதைக் கண்டு மன்னரின் மனம் உள்ளூர வருந்தியது. அதனை உணர்ந்தார் ஸ்வாமிகள்.