மாவிளக்கு ஏற்றி பெருமாளுக்கு பூஜை.. புரட்டாசி சனியின் வழிபாடு..!

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:23 IST)
புரட்டாசி சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தால் ஏராளமான நன்மை கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால் அந்த மாதத்தில் பெருமாளை பூஜித்து வருவது மிகப்பெரிய நன்மை கிடைக்கும். 
 
குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது பெரும் புண்ணியம் என்று கூறப்படுகிறது. 
 
புரட்டாசி சனிக்கிழமை அன்று பச்சரிசி மாவை தூய உடலோடு மனதோடும் இருந்து சலித்து மாவிளக்கு செய்து அதில் நெய் விளக்கு ஏற்றி தீபம் இடவேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்