திருமகள் நம்மை விட்டு விலகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?...

சாஸ்திரங்கள் சில நேரங்களில் கண்டிப்பாக அதிகாலை தூங்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

 
திருமகளின் திருவருளைப் பற்றி நினைத்தவுடனே அவள் எப்போதும் நம்மை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்ற  எண்ணந்தான் முதலில் வரும்.
 
சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.
 
இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது, தியானம், வழிபாடு போன்ற பய்னுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபடு பலமடங்கு புண்ணியத்தை தரும்.
 
சீரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனை போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகிவிடுவாள்  என்பது இதன் பொருள்.
 
தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள். ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம்  பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். பலரது அனுபவ நம்பிக்கை...முயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது  நிறைவேறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்