ஆனால் பண்டைய கால சமய நூல்களில் பல்லியை பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பல்லியை மிதித்து விட்டாலோ, தவறுதலாக கொன்று விட்டாலோ அதனால் ஏற்படும் பாவம் பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அது வணங்கத்தக்க உயிரினமாக கருதப்படுகிறது. நிகழப்போகும் இடர்பாடுகளில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி பல்லிக்கு உண்டு என்பது நம்பிக்கை. பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் கூறப்படுகிறது. ஜீவராசிகளில் பல்லிக்கு கூடுதல் சக்தி உண்டு என்பதில் மாற்றமில்லை.