பகவத்கீதையின் மிகச்சிறந்த உபதேசங்கள் பற்றி பார்ப்போம் !!

சனி, 4 ஜூன் 2022 (15:30 IST)
பகவத்கீதை என்றால் “பரம்பொருளின் கீதம்”, என்று பொருள்படுகிறது, அதாவது மனிதனுக்கும் அவன் படைப்பாளிக்கும் இடையே இறையனுபூதி பற்றிய தெய்வீக கருத்து பரிமாற்றம், ஆன்மாவின் மூலமாக பரம்பொருளின் போதனைகள், இது இடைவிடாமல் துதிக்கப்பட வேண்டும்.


உலகின் அனைத்து உயர் மறை நூல்களின் அடிப்படையாய் உள்ள முக்கிய உண்மைகள், கீதையின் வெறும் 700 சுருக்கமான பாக்களிலுள்ள எல்லையற்ற ஞானத்தில். பேரண்டத்தின் முழுஞானமும் கீதையினுள் திணித்து வைக்கப்பட்டுள்ளது.

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்:

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்