சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜை முறைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும்.

நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம் என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுதவும். மையத்தில் திருவிளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் தீபங்கள் ஏற்றி வைக்கவும்.
 
ஓம் ஸ்ரீமஹாசரஸ்வத்யை நமஹ|
ஓம் ஐம் வாக்தேவ்யை நமஹ|
ஓம் ஞான தாயின்யை நமஹ| என்றும் அர்ச்சனை செய்யவும்.
 
மேதே சரஸ்வதிவரே பூதி பாப்ரவிதாமஸி|
நியதே த்வம் ப்ரசீதேசி நாராயணி நமோஸ்துதே|| என்ற மந்திரம் சொல்லி புஷ்பம் சார்த்தவும்.
 
நிவேதனம்: பால் கற்கண்டு சாதம் மற்றும் இனிப்புப் பண்டங்களுடன், பாசிப்பருப்பு சுண்டலும் நிவேதனம் செய்து, சூடம் ஏற்றிக் காண்பிக்கவும்.
 
பெண்களுக்கு: சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கைத் துண்டுடன், மங்களப் பொருட்களும் வழங்கி, நிறைவில் ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில்
சேர்த்து நிறைவு செய்யவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்