கரூரில் பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி அலங்காரம்

தெலுங்கு வருடபிறப்பை முன்னிட்டு கரூரில் பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு புஞ்பாஞ்சலி அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.
தெலுங்கு வருடபிறப்பை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே தெலுங்கு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஆலயத்திற்கு வந்து இறைவழிபாடு நடத்தினர். 
 
கரூரில் உள்ள பசுபதீஸ்வரா ஐயப்பன் ஆலயத்தில் அதிகாலை மழை வேண்டியும், உலக நன்மைக்காவுகம் மூர்த்தி ஹோமம், மற்றும்  மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  ஐயப்பனுக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டது, பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட மலர்களை கொண்டு புஞ்பாஞ்சலி அலங்காரம் செய்யப்பட்டு  மஹாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். 
 
அதே போல் அந்த ஆலயத்தில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு அலங்கரம் மற்றும் மஹாதீபராதனை காட்டப்பட்டது. ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர். இதே போல., கரூர் மாவட்டத்தில்  உள்ள பல்வேறு ஆலயங்களில் தெலுங்கு வருடபிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்