எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்

ஞாயிற்றுக்கிழமை: 
சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு.
 
திங்கட்கிழமை விரதம்:
சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான விரதமாகும்.
 
செவ்வாய்க்கிழமை விரதம்: 
அங்காரக விரதம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனைத் தரும்.


 
 
புதன்கிழமை விரதம்:
அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
 
வியாழக்கிழமை:
குரு பகவானுக்குரிய நாள். இந்நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும்.
 
வெள்ளிக்கிழமை விரதம்:
சுக்ரவார விரதம். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் பண்ணலாம்.
 
சனிக்கிழமை விரதம்:
சனீஸ்வர பகவானைக் குறித்து இருப்பது என்றாலும் திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். தினமும் காக்கைக்கு அன்னமிட்ட வேண்டும். கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமை விரதமிருப்பது அவசியம்.
 
இது எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விரதம் இருக்கிறது. அதுதான் மௌன விரதம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்